முன்னாள் அமைச்சர் விஜேதாச ராஜபக்சவினால் இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
மாணவர்கள் எவ்வித நலனையும் பெற்றிராத சுரக்ஷா திட்டத்தின் ஊடாக 2300 மில்லியன் ரூபாய் முறையற்ற விதத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், 2018 இல் அச்சிடப்பட்ட 29 மில்லியன் பாடப்புத்தகங்களில் கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசத்தின் நிழற்படம் அச்சிடப்பட்டதன் ஊடாக அரச நிதி முறையற்ற விதத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் குறித்த முறைப்பாட்டில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதேவேளை, அரச நிறுவனங்களில் இடம்பெற்ற ஊழல் தொடர்பாக விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு இதுவரை 522 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.