இதன் கீழ் மாவட்டத்தில் இருந்து முன்பள்ளி டிப்ளோமா கற்கை நெறிக்கு விண்ணப்பிக்கப்பட்ட
முன்பள்ளி ஆசிரியர்களில் தெரிவு செய்யப்பட ஆசிரியர்களுக்கான நேர்முக
தேர்வு இன்று மட்டக்களப்பு மாவட்ட
செயலகத்தில் நடை பெற்றது
இந்த நேர்முக
தேர்வின் ஊடாக தெரிவு செய்யப்படும் முன்பள்ளி ஆசிரியர்கள் இலங்கை திறந்த பல்கலைக்கழகத்திலும் மற்றும் ,சப்ரகமுவ பல்கலைக்கழகத்திலும் இரண்டு வருட டிப்ளோமா கற்கை நெறியினையும் , தேசிய கற்கைகள்
நிறுவகத்தில் ஒரு வருட டிப்ளோமா கற்கை
நெறியினையும் பூர்த்தி செய்வதற்கான செயல் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன
மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சின் சிறுவர் செயலகத்தின்
மட்டக்களப்பு மாவட்ட முன்பிள்ளப் பருவ அபிவிருத்தி இணைப்பாளர் வி .முரளிதரன்
ஒழுங்கமைப்பில் மாவட்ட செயலக உதவி மாவட்ட செயலாளர் எ
.நவேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற நேர்முக தேர்வு
நிகழ்வில் உலக
வங்கியின் முன்பிள்ளை பருவ அபிவிருத்தி செயல் திட்டத்தின் பயிற்சி நிபுணர் டப்ளியு
டி . மதுராவன , உலக வங்கியின் முன்பிள்ளை பருவ அபிவிருத்தி செயல் திட்டத்தின் நிகழ்ச்சி திட்ட உத்தியோகத்தர் சரித் வீரசிங்க ,மண்முனை வடக்கு பிரதேச செயலக
சிறுவர் மேம்பாட்டு உத்தியோகத்தர் டி .மேகராஜ் மற்றும் முன்பள்ளி ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்