மக்களின் விருப்புக்கு இணங்க பிரித்தானியா, ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேற வேண்டும் என்ற கோஷத்தினை முன்வைத்து பிரெக்ஸிற் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பிரித்தானியக் கொடியை தாங்கிய வண்ணமாகக் கூடிநிற்கும் ஆர்ப்பாட்டக்காரர்கள் எங்களுக்குத் தேவை Brexit என்றும் “Bye bye EU” என்றவாறும் குரலெழுப்பி வருகின்றனர்.
ஆர்ப்பாட்டக்காரர்கள் பேரணியாக வெஸ்ற்மின்ஸ்ரர் சதுக்கத்தை நோக்கி வந்ததால் பாராளுமன்றத்திற்கு வெளியே போக்குவரத்துக்கள் தடைப்பட்டன.
இன்று மாலை 4 மணிக்குத் தொடங்கிய பிரெக்ஸிற் ஆதரவாளர்களின் கூட்டத்தில் பிரெக்ஸிற் ஆதரவு பாராளுமன்ற உறுப்பினர்கள் உரையாற்றியுள்ளனர்
இதேவேளை இன்று பிற்பகல் 2.30 க்கு நடைபெற்ற பிரதமரின் பிரெக்ஸிற் உடன்படிக்கை மீதான மூன்றாவது அர்த்தமுள்ள வாக்கெடுப்பு தோல்விடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இதன்மூலம் இனிவரும் நாட்களில் உடன்படிக்கை அற்ற பிரெக்ஸிற் அல்லது பிரெக்ஸிற் காலநீடிப்பு என்ற நிலை ஏற்பட்டுள்ளது.