அரியலூரில் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே திருமாவளவன் இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது,
“எதிரணியினரின் பொய் பிரசாரத்தை முறியடிக்க வேண்டிய கட்டாய சூழ்நிலையில் தற்போது உள்ளோம்.
அந்தவகையில் அ.தி.மு.க கூட்டணியொன்றை அமைப்பதற்கு பணத்தை அதிகமாக செலவு செய்கின்றது. ஆனால் எமது கூட்டணி பேரம் பேசி அமையவில்லை.
மேலும் தி.மு.க.வுக்கு குவியும் ஆதரவை திசைதிருப்புவதற்காக அ.தி.மு.க.வினர் அவதூறு பரப்புகின்றனர். அ.தி.மு.க.வின் ஆட்சியில் மக்களுக்கு எந்ததொரு பயனுமில்லை.
ஆகையால், தி.மு.க ஆட்சிக்கு வந்தாலே தமிழகத்தை பாதுகாக்க முடியும்” என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.