இயக்குநர் சற்குணத்தின் உதவியாளர் சாந்தமூர்த்தி இயக்கும் ‘டேனி’ திரைப்படத்தில் வரலட்சுமி முக்கிய வேடத்தில் தற்போது நடித்துவருகின்றார்.
பொலிஸ் அதிகாரியாக நடிக்கும் வரலட்சுமி, ஒரு கொலைக்கு காரணமான மூன்று நபர்களை கண்டுபிடிப்பதுதான் கதை. வரலட்சுமிக்கு உதவியாக இந்த படத்தில் ‘டேனி’ என்ற ஒரு நாய் நடித்துள்ளது.
‘சேவ் சக்தி’ என்ற அமைப்பை நடத்திவரும் வரலட்சுமி, தன்னை தேடிவரும் பெண்களுக்கு பல உதவிகள் செய்ததாகவும் கூறிய படக்குழுவினர் வரலட்சுமிக்கு ‘மக்கள் செல்வி என்ற பட்டத்தை வழங்க முடிவுசெய்துள்ளனர்.
இத்திரைப்படத்தின் தலைப்பில் வரலட்சுமிக்கு முன் ‘மக்கள் செல்வி’ என்ற தலைப்பு இருக்கும் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
வரலட்சுமி தொடர்ந்து மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். கதாநாயகி மட்டுமல்லாமல் குணச்சித்திர மற்றும் வில்லி கதாபாத்திரத்திற்கும் கச்சிதமாக பொருந்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.