அதிகளவு வருமானம் ஈட்டுவோர் தொhடர்பான சன்சைன் அறிக்கையை ஒன்றாரியோ அரசாங்கம் வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையிலேயே இந்த விடயம் தெரியவந்துள்ளது.
தொடர்ச்சியாக மூன்றாவது முறையாக முதலிடத்தை பெற்றுள்ள ஜெப்ரி லயாஷ், கடந்த 2018ஆம் ஆண்டில் 1746824.96 (1.7 மில்லியன்) டொலர்களை வருமானமாக ஈட்டியுள்ளார். 2017ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது அது 12.3 சதவீதம் அதிகமானது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், இந்த அறிக்கையில் முதல் பத்து இடங்களையும் ஆண்களே பிடித்துக் கொண்டுள்ளனர் என்பது சுட்டிக்காட்டப்பட வேண்டியதாகும்.
கடந்த 2003ஆம் ஆண்டுக்கும் 2018ஆம் ஆண்டுக்கும் இடையில் சம்பளங்கள் சராசரியாக 48.1 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டில் ஒரு இலட்சம் டொலர்களுக்கு மேல் வருமானம் ஈட்டிய பொதுத்துறை ஊழியர்களின் பெயர் விபரங்கள் அடங்கிய அறிக்கையே சன்சைன் அறிக்கை எனப்படும்.