மக்களவை தேர்தல் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தைகள் நாடு முழுவதும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறன. அதேநேரம், அ.தி.மு.க கூட்டணியில் தே.மு.தி.கவை இணைப்பதற்காக பல கட்ட பேச்சுவார்த்தைகளை அ.தி.மு.க நடத்தியுள்ளது.
அந்தவகையில், அ.தி.மு.க கூட்டணியில் தே.மு.தி.க பங்கேற்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது என்று சென்னையில் இன்று (புதன்கிழமை) செய்தியாளர்கள் கேள்விக்கு பதிலளித்த துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இதனைத் தெரிவித்தார்.
தொடர்ந்தும் தெரிவித்த அவர், அ.தி.மு.க அணியில் தே.மு.தி.க இடம்பெறுவது உறுதி. தேமுதிக தலைவர்கள் சற்றுநேரத்தில் என்னை சந்திக்க வரவள்ளனர் எனக் கூறினார்.
கூட்டணி தொடர்பாக சென்னையில் உள்ள முதல்வர் இல்லத்தில் முதல்வர் பழனிசாமியும், தே.மு.தி.க அலுவலகத்தில் அக்கட்சியின் தலைவர் விஜயகாந்தும் இன்று ஆலோசனை நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.