குறித்த சொத்துக்களை அமலாக்கத்துறை நேற்று (வெள்ளிக்கிழமை) முடக்கியுள்ளது.
அந்தவகையில் குறித்த வழக்கில் தொடர்புடைய மேலும் 3 வர்த்தக நிறுவனங்களின் சொத்துக்களையும் அமலாக்கத்துறை முடக்க நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும் கூறப்படுகின்றது.
கடந்த 2006ஆம் ஆண்டில் மத்திய நிதியமைச்சராக ப.சிதம்பரம் இருந்தபோது, ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனத்துக்கு அந்நிய முதலீடுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதன்போது முறைகேடு இடம்பெற்றுள்ளதாகவும் அதற்கு கார்த்தி சிதம்பரத்தின் நிறுவனம் முழுமையான பங்களிப்பை வழங்கியுள்ளதாகவும் பகிரங்கமாக குற்றம் சுமத்தப்பட்டது.
இந்நிலையிலேயே அவர்கள் இருவருக்கும் எதிராக வழக்குப் பதிவு செய்து, விசாரணைகளை அமலாக்கத்துறை தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றது