இது சுமார் 28 கிலோ எடை கொண்ட, 90 மில்லியன் டொலர்கள் பெறுமதியான முத்து எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இது, இவ்வளவு காலமும், உலகிலேயே பெரிய முத்து என கருதப்பட்ட, அல்லாவின் முத்தை விட நான்கு மடங்கு பெரியது எனவும் கூறப்படுகின்றது.
இந்த முத்தின் பெருமையையும், முக்கியத்துவத்தையும் உலகம் அறியவேண்டும் என்பதற்காக அதனை வெளிப்படுத்தியுள்ளதாக ஆபிரகாம் றெயிஸ் தெரிவித்துள்ளார்.
ராட்சத சிப்பிக்குள் இருந்த குறித்த முத்து, 1000 ஆண்டுகள் பழமையானது என நம்பப்படுகிறது.