இன்று பிரித்தானிய பாராளுமன்றத்தில் இடம்பெற்ற மூன்றாவது வாக்கெடுப்பிலும் பிரதமர் தெரேசா மே-யின் பிரெக்ஸிற் ஒப்பந்தம் நிராகரிக்கப்பட்டதைத் தொடர்ந்தே இந்த உச்சிமாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ரஸ்க் தெரிவித்துள்ளார்.
பிரெக்ஸிற் தொடர்பான பிரித்தானியாவின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து இந்த உச்சிமாநாட்டின்போது ஐரோப்பிய தலைவர்களிடம் விளக்குவதற்கு பிரதமர் தெரேசா மே கேட்டுக்கொல்லப்படுவாரென எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் இந்த உச்சிமாநாட்டுக்கு முன்னராக பிரெக்ஸிற் தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து பிரித்தானிய பாராளுமன்றம் தீர்மானிக்க வேண்டுமென ஐரோப்பிய கவுன்சில் வலியுறுத்தியுள்ளது.