2019ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு 43 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.
இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பின்போது 119 வாக்குகள் ஆதரவாகவும், 76 வாக்குகள் எதிராகவும் அளிக்கப்பட்டன.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் முற்போக்கு கூட்டணி ஆகியன ஆதரவாகவும், ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு, மக்கள் விடுதலை முன்னணி ஆகிய தரப்புக்கள் எதிராகவும் வாக்களித்திருந்தன.
இந்தநிலையில் எதிர்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷவுடன் அதிக நெருக்கம் காட்டி வந்த இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் வரவு செலவுத்திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்துள்ளது.
அந்த கட்சியின் தலைவர் ஆறுமுகன் தொண்டமான் எம்.பியும், முத்து சிவலிங்கம் எம்.பியும் ஆதரவாக வாக்களித்திருந்தமைக் குறிப்பிடத்தக்கது.