சந்திரமுகி திரைப்படத்திற்கு பின்னர் ரஜினிகாந்துடன் நயன்தாரா இணையும் இத்திரைப்படம் இரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியுள்ளது.
இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 10ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந் இத்திரைப்படத்தில் பொலிஸ் அதிகாரியாக நடிக்கவுள்ளதுடன், அரசியல் கலந்த சமூக திரைப்படமாக இத்திரைப்படம் அமையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.