மத்திய பிரதேச மாநிலம், பாமோரா பகுதியல் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அமித் ஷா இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறியதாவது,
“அண்மையில் நமது படையினர் மீது பாகிஸ்தானைச் சேர்ந்த தீவிரவாத அமைப்பு நடத்திய தாக்குதலில் 40 வீரர்கள் உயிரிழந்தனர்.
அதனைத் தொடர்ந்து அதற்கு பதிலடி வழங்கும் வகையில் பாகிஸ்தானுக்குள் இந்திய விமானப் படை சென்று அதிரடி தாக்குதல் நடத்தியது.
இந்த செயற்பாட்டை மக்கள் அனைவரும் பாராட்டினர். ஆனால் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இத்தாக்குதலுக்கு ஆதாரத்தை கேட்டுக்கொண்டிருக்கின்றார்.
இவ்வாறு ராகுல் ஆதாரங்களை கோருவது உயிர்த் தியாகம் செய்த இராணுவ வீரர்களை அவமதிக்கும் செயற்பாடாகும். ஆகையால் இவருக்கு மக்கள் தேர்தல் ஊடாக பதிலடி கொடுக்க வேண்டும்” என அமித் ஷா தெரிவித்துள்ளார்.