
குஜராத் மாநில தலைநகர் அகமதாபாத்தில் இன்று (செவ்வாய்கிழமை) இடம்பெற்ற நிகழ்வில் கலந்துக்கொண்ட பிரதமர், ஓய்வூதிய திட்டத்தை ஆரம்பித்துவைத்ததுடன், பயனாளிகளுக்கு காப்பீட்டு சான்றிதல்களையும் வழங்கி வைத்துள்ளார்.
இதற்கமைய மாதாந்தம் 15000 ரூபாய்க்கும் குறைவான வருமானத்தை பெறும் தொழிலாளர்கள் இத்திட்டத்தில் இணைந்துக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இவ்வாறு இணைந்துக்கொள்ளும் தொழிலாளர்கள் 60 வயதை பூர்தியடைந்தவுடன் மாதாத்தம் 3000 ரூபாய் ஓய்வூதியத்தை பெற்றுக்கொள்ளலாம் என குறிப்பிடப்படுகிறது.
இந்நிகழ்வில் குஜராத் முதலமைச்சர் விஜய் ருபானி பங்கேற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
