இந்நிலையில், அமெரிக்காவிற்கு பதிலடி கொடுக்கும் வகையில் வரித்தீர்வைகளை அதிகரிப்பது குறித்து கனடா ஆலோசனை நடத்தி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இறக்குமதி செய்யப்படும் உருக்கு மீது 25 வீத மற்றும் அலுமினியம் மீது 10 வீத வரியை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம் அமுல்படுத்தியது.
அமெரிக்காவின் இந்த வரி விதிப்பு சட்டவிரோதமானது என்றும் நியாயமற்றது எனவும் கனேடிய பிரதமரும், வெளியுறவுத்துறை அமைச்சரும் குறிப்பிட்டனர்.