வரவு செலவுத்திட்டம் மீதான விவாதத்தில் பங்கேற்று இன்று(செவ்வாய்கிழமை) நாடாளுமன்றத்தில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “51 நாள் அரசியல் சூழ்ச்சி காரணமாகவே நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்தது. அந்த நிலைமையை தற்போது நாங்கள் மாற்றியமைத்துள்ளோம்.
எதிர்காலத்தில் எதிர்பார்க்கும் பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்த சகல முயற்சிகளையும் மேற்கொள்வோம்.
நுண்கடன் மாபியாவை ஏற்படுத்தியவர்கள் இன்று அதுதொடர்பாக முதலைக்கண்ணீர் வடிக்கின்றனர். இதனை கட்டுப்படுத்த நாங்கள் நடவடிக்கை எடுத்திருக்கின்றோம்.
அத்துடன் கடந்த காலத்தில் இருந்த வெள்ளை வான்கள் ஊடான கடத்தல்களை இல்லாமலாக்கி தமிழ் முஸ்லிம் மக்களுடன் நல்லிணக்கத்தை ஏற்படுத்தியதன் மூலம் ஜ.எஸ்.பி.சலுகையை பெற்றுக்கொள்ள முடிந்தது“ என தெரிவித்துள்ளார்.