இந்தியாவிற்கு விஜயம் செய்துள்ள கென்ய வெளிவிவகார அமைச்சருடன் இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற சந்திப்பின்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
டெல்லியில் உள்ள வெளிவிவகார அமைச்சில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது
இந்தியாவுக்கான மூன்று நாள் விஜயத்தை மேற்கொண்டுள்ள கென்ய வெளிவிவகார அமைச்சர் மோனிக்கா ஜூமா இன்று இந்திய வெளிவிவகார அமைச்சரை சந்தித்துள்ளார்.
இந்தச் சந்திப்பில் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை வலுபடுத்துவது குறித்து பேசப்பட்டுள்ளதுடன், இரு நாசடுகளுக்கிடையிலும் பொருளாதாரம், உட்கட்டமைப்பு உள்ளிட்ட பல துறைகள் தொடர்பான ஒப்பந்தங்களும் கைச்சாத்திடப்பட்டுள்ளன.