மூதூர் பிரதேச செயலக பிரிவிலிருந்து தோப்பூரை தனியான பிரதேச செயலகமாக மாற்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இரகசியமாக முயற்சிக்கும் விடயம் குறித்து அவர் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு அண்மையில் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
அத்துடன் தோப்பூரை தனியான பிரதேச செயலகமாக மாற்றும் அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கும் முயற்சிகள் இரகசியமாக நடந்து வந்த நிலையில், அதை நிறுத்துமாறு பிரதமரிடம் அவர் கோரியுள்ளார்.
அவர் எழுதியுள்ள கடிதத்தில் “மூதூர் பிரதேச செயலாளர் பிரிவும் ஆரம்பத்தில் தமிழர் பெரும்பான்மையாக இருந்த ஒரு பிரதேசமேயாகும்.
யுத்தம் காரணமாக பெரும் எண்ணிக்கையிலான தமிழர் இடம்பெயர்ந்து தற்போது திருகோணமலை மாவட்டத்தின் அல்லது நாட்டின் ஏனைய பாகங்களிலும் வெளிநாடுகளிலும் வசிப்பதையடுத்து, மூதூர் பிரதேசம் தற்போது முஸ்லிம் பெரும்பான்மை பிரதேசசெயலகப் பிரிவாகஉள்ளது.
இப்பிரிவில், 70,188 பேரைக் கொண்டிருக்கிறது. அவர்களுள் 42,599 பேர் முஸ்லிம்கள், 26,608 பேர் தமிழர் மற்றும் 981 பேர் சிங்களவர்களாகவும் உள்ளனர்.
தற்போதைய முன்மொழிவு முஸ்லிம்களை பெரும்பான்மையினராகவும் ஒரு சில தமிழர்களையும் கொண்ட தோப்பூர் பிரதேசசெயலகப்பிரிவு என்றழைக்கப்படும் இன்னமொரு முஸ்லிம் பெரும்பான்மை பிரிவை ஏற்படுத்துவதற்கானதாகும். இதன் விளைவாக ஏற்படும் நிலையானது, இரண்டு முஸ்லிம் பெரும்பான்மை பிரிவுகள் இருக்கும் என்பதாகும்.
இவ்விரு பிரிவுகளிலும் தமிழ் மக்கள் சிறுபான்மையினராகவே இருப்பர். இது அவர்களது எதிர்காலத்திற்குப் பாதகமானதாகும்.
அத்தகைய முன்மொழிவிற்கு அனுமதிகோரி அடுத்த அமைச்சரவைக் கூட்டத்தில் அல்லது விரைவில் அமைச்சரவைப் பத்திரமொன்று சமர்ப்பிக்கப்படவிருப்பதாக எனக்கு அறியக் கிடைக்கிறது.
தமிழ் மக்கள் பெருமளவில் இடம்பெயர்ந்திருந்தும் மூதூர் பிரதேச செயலகப் பிரிவின் மொத்தமக்கள் தொகையில் அவர்கள் இன்னும் 40 வீதத்தினராக உள்ளனர் என்பதை நீங்கள் காண்பீர்கள். தமிழ் மக்களை இரண்டு பிரதேச செயலகப் பிரிவுகளில் பிரித்து இரு பிரிவுகளிலும் அவர்கள் சிறுபான்மையினராக இருக்கும் வண்ணம் செய்வது அநீதியானதாகும்.
எனவே,தற்போதைய முன்மொழிவு முன்கொண்டு செல்லப்படலாகாது என்றும் அனைவருக்கும் நீதி வழங்கப்படுவதை உறுதிப்படுத்தும் வகையில் பல்வேறு மக்களது பிரதிநிதிகளோடும் உரிய கலந்துரையாடல்கள் நடத்தப்பட வேண்டுமென்றும் நான் வலியுறுத்த விரும்புகின்றேன்.
தோப்பூர் பிரதேச செயலகப் பிரிவு என்று பெயரிடப்பட்ட இன்னமொரு முஸ்லிம் பெரும்பான்மை பிரதேசசெயலகப் பிரிவை ஏற்படுத்துவதற்கான தற்போதைய முன்மொழிவு இறுதித் தீர்மானங்கள் எட்டப்படும்வரை நிறுத்தப்பட வேண்டுமென நான் வினயமாக கேட்டுக்கொள்கிறேன்” என்று அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்