கிரேக்க வான் எல்லைக்குள் நேற்று (திங்கட்கிழமை) நுழைந்த துருக்கிய போர் விமானங்கள், தனது ஹெலிகொப்டரை ‘தாழ்ந்து பறக்கும்’ நிர்ப்பந்தத்துக்கு உள்ளாக்கியதாக கிரேக்கப் பிரதமர் அலெக்சிஸ் சீப்ரஸ் தெரிவித்துள்ளார்.
அத்துடன், துருக்கியின் செயலை ‘அர்த்தமற்ற முட்டாள்தனமான நடவடிக்கை’ எனவும் அவர் விமர்சித்துள்ளார்.
அலெக்சிஸ்ஸின் குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு தெரிவித்துள்ள துருக்கி இராணுவம், தங்கள் நாட்டுப் போர் விமானங்கள் வழக்கமான ஒத்திகையிலேயே ஈடுபட்டதாக தெரிவித்துள்ளது.
கிரேக்கம் மற்றும் துருக்கி எல்லைக்கு அருகே மத்தியத் தரைக்கடல் பகுதியில் அமைந்துள்ள இஜியன் தீவு தொடர்பாக இருநாடுகளுக்கிடையே பல தசாப்தங்களாக பிரச்சனை நீடித்து வருகின்றமைக் குறிப்பிடத்தக்கது.