கொழும்பில், இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றையடுத்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டபோதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இதன்போது மேலும் தெரிவித்த அவர், “டி.எஸ்.சோனநாயக்க காலத்திலிருந்து தற்போதுவரை தமிழ் பிரதிநிதிகள் கொழும்பில் அரசியல் செய்யும் சூழல் காணப்படுகிறது. அவர்களுக்கு எல்லா இடத்திலும் அரசியல் செய்ய உரிமையுள்ளது.
அதேபோல், எமக்கும் நாட்டின் அனைத்து இடங்களிலும் அரசியல் செயற்பாடுகளை செய்ய உரிமையுள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பினருக்கு யாழ்ப்பாணத்தில் மட்டுமல்ல, கொழும்பில் கூட தேர்தல் களத்தில் நிற்க முடியும்.
ஏனெனில், இலங்கை என்பது அனைவருக்கும் உரித்தான ஒரு நாடாகும். இலங்கை தமிழ், சிங்கள, முஸ்லிம் என பிரிந்த ஒரு நாடாக நான் கருதவில்லை. நாம் அனைவரும் இலங்கையர்கள்.
அரசியல் பலத்தை தீர்மானிப்பது மக்களே. எனவே, யார் வேண்டுமானாலும் அரசியல் அதிகாரத்துக்கு வரலாம். எங்கும் போட்டியிடலாம்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.