உத்தரப் பிரதேச தலைநகர் லக்னோவில் காஷ்மீரைச் சேர்ந்த மூன்று வியாபாரிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இந்தச் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள், காஷ்மீரிகளை மிகக் கொடூரமாக தாக்கியதாக தெரிவித்தனர்.
இதுதொடர்பாக அவர் தனது ருவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது, “லக்னோவில் காஷ்மீர் சகோதரர்களைத் தாக்கியவர்கள் மீது உ.பி. அரசாங்கம் கடுமையான நடவடிக்கை எடுத்துள்ளது. இது போன்று சம்பவம் நடந்தால் எல்லா மாநில அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என பதிவிட்டுள்ளார்.
அவர்களைக் கல் எறிபவர்கள் என்று அழைத்தும், ஆதார் அட்டையை காண்பியுங்கள் என்றும் துன்புறுத்தப்பட்டதாக கூறப்பட்டது. இந்தச் சம்பவத்துக்கு காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஓமர் அப்துல்லா, மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி ஆகியோர் கண்டனம் தெரிவித்தனர்.
பின்னர் தாக்குதல் நடத்திய 4 பேரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர் என்று மாநில டி.ஜி.பி. ஆனந்த்குமார் மற்றும் கூடுதல் டிஜிபி ராஜீவ் கிருஷ்ணா செய்தியாளர்களிடம் தெரிவித்தனர்.
இந்நிலையில் காஷ்மீர் சகோதரர்களை யாரவது தாக்கினால் நடவடிக்கை எடுங்கள் என்று மாநில அரசுகளுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.