சென்னை, சாலிகிராமத்திலுள்ள விஜயகாந்தின் வீட்டிலேயே குறித்த சந்திப்பு இன்று காலை இடம்பெற்றுள்ளது.
இதன்போது முதலமைச்சர் பழனிசாமி, விஜயகாந்தின் உடல் நலம் தொடர்பில் விசாரித்ததாக கூறப்படுகின்றது.
அ.தி.மு.க கூட்டணி தொகுதிகள் அறிவிப்பில் இழுபறி ஏற்பட்டுள்ள நிலையில் பழனிசாமி, விஜயகாந்தை சந்தித்துள்ளமை முக்கியமானதென்றாக கருதப்படுகின்றது.
இதேவேளை பா.ம.க நிறுவனர் ராமதாஸ், த.மா.கா தலைவர் ஜி.கே.வாசன் ஆகியோர் விஜயகாந்தை சந்தித்து நலன் விசாரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.