“அது (ஞானம்) அது மீண்டும் அவர்களிடமே வந்து அவர்களை மகிழ்விக்கும்| அவர்களுக்குத் தன் இரகசியங்களை வெளிப்படுத்தும்.
அதைவிட்டு அவர்கள் விலகிச் சென்றால், அவர்களை அது கை விட்டுவிடும்| அழிவுக்கு அவர்களை இட்டுச் செல்லும்.”
நீதி வழி நடக்க வேண்டியவர்கள் அதை விட்டு விலகி நடந்து தம் சுய நலனை மனதிற்கொண்டு செயற்பட முனைந்தால் அவர்கள் வாழ்வு நரகமாகும். அவர்கள் பெறும் வெற்றிகள் தற்காலிகமானதே. அவர்களும் ஏதோ தம் வழிதான் சரி வழி என்று தம் போக்கிலேயே தொடர்ந்தும் வாழ்வார்களானால் அவர்கள் வீழ்ச்சி நிச்சயம். கடவுள் அவர்களைத் தக்க தருணத்தில் கைவிட்டு விடுவார்.
ஏழாம் நிலை
வாட்டும் சிலுவை
திவ்விய இயேசுவே உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றியறிந்த தோத்திரம் சொல்லுகின்றோம்.
அதேதென்றால் உமது திருச்சிலுவையைக் கொண்டு உலகத்தை மீட்டு இரட்சித்தீர்.
துன்பங்கள் நாளும் தனித்து வருவதில்லை .. .. தன்னைக் கண்டு அஞ்சுபவர் தம்மை விட்டுப் போவதுமில்லை. .. பட்ட காலிலே பட்டு நிற்கும். .. .சுட்ட புண்ணிலே வேலைப் பாய்ச்சும்!
அழுகையும் , புலம்பலும் அதன் உடன் பிறப்பு. .. அழிவும் சாவும் அதன் பின் விளைவு.
துன்பத்தைப் பகிரத் துணையொன்று தேவை .. .. அதை எதிர்த்து நின்றிட நெஞ்சுரம் தேவை.!
இயேசுவோ ஒன்றும் நோஞ்சானல்ல. .. உடல் வலிமையில் அவர் சலித்தவருமில்லை... .. ஆனாலும், தொடரும் துன்பங்கள் அவரை வாட்டவே.. .. அவரது உடல் அவரைக் கைவிட்டது.
துன்பத்தின் தன்மை புரிந்தவர் அவர் .. .. வேதனையின் தன்மை தெரிந்தவர் அவர்.!
துன்பத்தின்போது துணைவர அவரைப்போலொரு நெஞ்சமில்லை... ..
பல சந்தர்ப்பங்களில் ஏதோ எமக்குத்தான் தீராத தலைவலியும், மாறாத மனவலியும் போலிருக்கும்.. ..
ஆனால் அடுத்தவர் கதையைக் கேட்பதில்தான் எம் துன்பம் ஒன்றும் பெரிதல்ல என்ற உண்மை எமக்குப் புரியவரும்.
நம் வாழ்க்கை நலமாய்ப் போகும்போது கடவுளை அதிகம் நினைப்பதில்லை. வாட்டும் துன்பச் சூழலில் கடவுளைப் பிரிய மனமில்லை.
துன்பத்தைச் சுமந்த இயேசுவிடம் எம் நெஞ்சத்தைத் திறந்து சொல்லி வைப்போம்:-
“துன்பம் வரும் வேளையிலே இயேசுவே.. .. உம்மை நினைக்கின்ற எந்தன் நெஞ்சம் ... ..சொகுசும் வசதியும் பெருகிவிட்டால் எண்ணியும் பார்ப்பதில்லை ஏன் இயேசுவே.? என் துன்பத்தில் உதவியைத் தேடும் நான் .. .. ஏன் பிறர் துன்பத்தில் பங்கு கொள்வதில்லை? சுயநலம் என்னை மாற்றினால் விடுதலை எனக்குத் தரவேண்டும். .. அயலவன் தன்னை என்போல நினைக்கின்ற பண்பைத் தரவேண்டும்.”
எங்கள் பேரிற் தயவாய் இரும் சுவாமி.. .. எங்கள் பேரிற் தயவாய் இரும்!
மரித்த விசுவாசிகளின் ஆன்மாக்கள் சர்வேசுரனின் இரக்கத்தால் நித்திய சமாதானத்தில் இளைப்பாறக் கடவன.