இதன்படி சுமார் 182 மத பள்ளிகளை கையகப்படுதியுள்ளதாக அந்நாட்டு உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்தியாவின் ஜம்மு – காஷ்மீர் பகுதியில் இடம்பெற்ற புல்வாமா தாக்குதலில் 40இற்கும் மேற்பட்ட சி.ஆர்.பி எஸ் வீரர்கள் கொல்லப்பட்டனர். இதனையடுத்து இந்த தாக்குதலுக்கு பதில் தாக்குதல் நடத்தும் முகமாக இந்தியா விமான தாக்குதலை மேற்கொண்டது.
இந்த தாக்குதலின் போது இந்திய விமானி அபிநந்தன் பாகிஸ்தானால் கைது செய்யப்பட்டு பின்னர் நல்லெண்ண அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டார்.
இந்நிலையில் பாகிஸ்தானில் செயற்படும் தீவிரவாத இயக்கங்களுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை அந்நாட்டு அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றது. அதன் ஒரு கட்டமாக ஜெய்ஷி இ முகமது இயக்கத்தினை சேர்ந்த 44 தீவிரவாதிகள் கைதுசெய்யப்பட்டனர். இந்நிலையில் தற்பொழுது 182 மத போதனைகளை முன்னெடுக்கும் முகாம்களை அந்நாட்டு அரசாங்கம் கையகப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.