
அரசாங்கத்தின் 2019ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டம் நிதியமைச்சர் மங்கள சமரவீரவினால் இன்று (செவ்வாய்க்கிழமை) சமர்ப்பிக்கப்பட்டது.
இது தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் மேற்கண்டவாறு கூறினார்.
குறிப்பாக செங்கல் வீட்டுத் திட்டங்களை மக்கள் விரும்பாத போதும் அவற்றினை திணிக்கும் வகையில் வரவு செலவு திட்டத்தில் இடம்பெற்றுள்ளது என அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும் தொழிற்துறையை முன்னேற்றும் வகையிலோ, இளைஞர் யுவதிகளை கவர்கின்ற வகையிலோ இந்த வரவு செலவு திட்டத்தில் முக்கியமனா விடயங்கள் உள்ளடக்கப்படவில்லை என என்றும் தெரிவித்துள்ளார்.
