“ஞானத்திற்குப் பணிவோர் மக்களினங்களிற்குத் தீர்ப்பு வழங்குவர்| அதற்குச் செவி சாய்ப்போர் பாதுகாப்பாய் வாழ்வர்.
ஞானத்தை நம்புவோர் அதனை உரிமையாக்கிக் கொள்வர்| அவர்களுடைய வழிமரபினரும் அதனை உடமையாக்கிக் கொள்வர்.
முதலில் அவர்களை அது கோணல் வழியில் அழைத்துச் செல்லும், அவர்களுக்கு அச்சநடுக்கத்தை வருவிக்கும்| அவர்களுக்குத் தன்மீது நம்பிக்கை ஏற்படும் வரை அவர்களை அது கண்டிக்கும், வதைக்கும்| தன் நெறி முறைகளால் அவர்களைச் சோதிக்கும்.”
நேர்மையாக, உண்மையாக வாழ்வது என்பத ஒன்றும் சுலபமான காரியமாகாது. அப்படி வாழாதவர்களிடமிருந்து நிச்சயமாக எதிர்ப்புக்களைக் கொண்டு வந்தே தீரும். ஏனெனில் நம்முடைய நேர்மை அவர்களுக்கு அச்சுறுத்தலாக அமைந்து விடும் சந்தர்ப்பங்கள் அதிகம். இப்படியான வேளைகளில் தம் பாதுகாப்பைக் கருதி அல்லது தம்முடைய இருப்பை நிலைநாட்ட மற்றவர்கள் உண்மையாக வாழ முற்பட்டால் அதை எதிர்க்கவே செய்வர்.
ஆறாம் நிலை
பெண்ணின் துணிவு
திவ்விய இயேசுவே உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றியறிந்த தோத்திரம் சொல்லுகின்றோம்.
அதேதென்றால் உமது திருச்சிலுவையைக் கொண்டு உலகத்தை மீட்டு இரட்சித்தீர்
பெண்ணென்று அவள் தயங்கியதில்லை. .. ..தீமைகள் நிலைபெற விட்டதுமில்லை.. .. தன் சக்திக்கேற்ற செயல் செய்தாள் .. .. இயேசு சொன்னதுபோல் அவள் வாழ்தலுற்றாள்.
பூமாதேவிபோல் அவள் பொறுத்திருந்தாள் .. .. கொடுமைகள் தீரும் என நினைத்திருந்தாள் .. ..அவள் பொறுமைக்கும் ஒரு எல்லையைக் கொண்டு வந்தார் .. .. இயேசு அழியவேண்டும் என முனைந்து நின்றோர்.
இரத்தமும் வேர்வையும் கண்ணை மறைக்குதிங்கே .. .. பலயீனம் நடையைத் தளரப் பண்ணுதிங்கே .. ..அதற்குள் மேலும் வன்முறையா? .. .. அவரின் உடலில் சாட்டையடியா?
பொங்கியெழுந்தது அந்தப் பேதை மனம் .. ..தடைகள் அவளைக் கண்டு அஞ்சின .. .. துணிந்தவள் ஒதுக்கித் தள்ளி வந்து இயேசுவின் முகத்தைத் துடைக்கிறாள். .. ..பலனைக் கையோடு பெறுகிறாள்.
நன்மைக்குப் பலனைத் தருபவர் இயேசு .. .. பலனுக்காய் நன்மைகள் செய்வதல்ல இலாபம்.
மனிதம் வாழ உதவுபவர் தமக்கு .. வாழ்வின் அருளைப் பொழிபவர் இயேசு.
உதவும் மனங்களுக்குப் பேதங்களில்லை .. ..வழங்கும் கரங்களுக்கு வேறுபாடுகள் இல்லை... .. ஆண் என்றும் பெண்ணென்றும் இல்லை. .. மனிதத்தை மதிக்கும் பண்பொன்றே தேவை. அநீதி கண்டு அது பொறுப்பதுமில்லை .. .. அநீதிக்குத் துணை போவதுமில்லை.
இயேசுவோடு பேசுவோம் .. .. ஆசையோடு சொல்லுவோம்..:-
“ அநீதிகள் கண்டும் மௌனியாய் வாழாமல் .. .. நீதிக்காகச் செயல்படவேண்டும் .. நான் ஆணென்றும், பெண்ணென்றும் தயங்குதல் வேண்டாம் இயேசுவே. துணிவுடன் எதிர்க்கின்ற வரம் தர வேண்டும். ”
எங்கள் பேரிற் தயவாய் இரும் சுவாமி.. .. எங்கள் பேரிற் தயவாய் இரும்!
மரித்த விசுவாசிகளின் ஆன்மாக்கள் சர்வேசுரனின் இரக்கத்தால் நித்திய சமாதானத்தில் இளைப்பாறக் கடவன.