தேர்தல் நடத்துதல், ஆர்ப்பாட்டத்தின் போது கைது செய்யப்பட்டவர்களை வெளிவிடுதல், எதிர்கட்சியோடு பேச்சுவார்த்தை நடத்தி நாட்டில் நிலவும் தசாப்தகால அரசியல் பிரச்சினையை தீர்த்தல் ஆகியவற்றை உள்ளடங்கி குறித்த அறிக்கையை அரசாங்கம் வெளியிட்டுள்ளது.
கடந்த 3 தசாப்தமாக நிக்காராகுவா நாட்டில் நிலவி வரும் அரசியல் நெருக்கடிக்கு முற்றுப்புள்ளி வைக்குமாறும் தேர்தல் நடத்துமாறும் கோரி மக்கள்போராடி வந்தனர். போராட்டத்தின் போது 320 போராளிகள் கொல்லப்பட்டதோடு பலர் காயங்களுக்கு உஉள்ளாகி இருந்தனர். நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் எதிர்கட்சியுடனான பேச்சு வார்த்தையில் அரசாங்கம் ஈடுபடுவதாக தெரிவித்துள்ளது. இதேவேளை அரசாங்கத்தின் அறிக்கை வெளியாகியுள்ள போதும் கோரிக்கைகளை நிறைவேற்ற தாமதமாகலாம் என அந்நாட்டு எதிர்க்கட்சி தெரிவித்துள்ளது.