சித்திரைப் புதுவருட
பண்டிகையை முன்னிட்டு கடையடைப்பு
நடவடிக்கை தளர்த்தப்பட்டுள்ளதாக மாநகர முதல்வர்
அறிவித்துள்ளார்.
மட்டக்களப்பு மாநகர
சபையும் , மட்டக்களப்பு வர்த்தக சங்கமும் இணைந்து எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு
அமைய மட்டக்களப்பு மாநகரசபையின் நிர்வாக எல்லைக்குட்பட்ட பகுதியில் வர்த்தக நடவடிக்கையில்
ஈடுபடுகின்ற வர்த்தக நிலையங்களுக்கு விடுமுறை நாட்களில் விதிக்கப்பட்டிருந்த கடையடைப்பு
நடவடிக்கையானது சித்திரைப் புதுவருட பண்டிகையை முன்னிட்டு கடையடைப்பு நடவடிக்கை தளர்த்தப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாநகர முதல்வர்
தியாகராஜா சரவணபவன் அறிவித்துள்ளார்.
எதிர்வரும் சித்திரைப்
புதுவருட பண்டிகைகளை முன்னிட்டு வியாபார நிலையங்களின் விற்பனை அதிகரிப்புக் காலம்
மற்றும் நுகர்வோரின் கொள்வனவு வசதிகள்
போன்றவற்றினைக் கருத்திற் கொண்டு சகல வியாபார நிலையங்களும் 31.03.2019 ஆம் திகதி தொடக்கம்
14.
.04.2019 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை வரை வியாபார
நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு அனுமதி வழங்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.
மீண்டும் கடையடைப்பு நடைமுறையானது எதிர்வரும் 21. .04.2019 திகதி முதல் அமுல்படுத்தப்படும் என்பதனையும் தெரிவித்துள்ளார்