பாதுகாப்பு ஊடக மத்திய நிலையத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
மேலும் இதன் போது போர் குற்றம் தொடர்பில் பரவலாக பேசப்படும் நிலையில், அவற்றுக்கு எதிராக இலங்கையின் படையினரை பாதுகாக்கும் விதமாக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் என்ன என ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன, “நான் பிணையில் உள்ள ஒரு சந்தேக நபர். என்னிடம் இவ்வாறான கேள்விகளை கேட்டு என்னை மேலும் சிக்கலுக்குள் தள்ளாதீர்கள்” என கூறியுள்ளார்.
2008, 2009 காலப்பகுதியில், 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேக நபரான சந்தன பிரசாத் ஹெட்டியாராச்சி என்பவருக்கு அடைக்கலம் வழங்கியதாக ரவீந்திர விஜேகுணரத்ன மீது குற்றம் சுமத்தப்பட்டது.
இந்த வழக்கு விசாரணைகளில் இருந்து அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன பிணையில் விடுவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.