
மன்னார்- திருக்கேதிஸ்வரத்தில் இடம்பெற்ற சம்பவம் குறித்து நேற்று (திங்கட்கிழமை) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே வி.எஸ். சிவகரன் இதனை குறிப்பிட்டுள்ளார். அவ்வறிக்கையில் அவர் மேலும் கூறியுள்ளதாவது,
“கட்டமைக்கப்பட்ட சுய ஒழுக்க நெறியை மரவுசார் கலாசார பாரம்பரிய விழுமியத்துடன் பின்பற்றுவதே சமய நெறி முறை ஆகும். பிறரை பாதிக்காத வகையில் ஒவ்வொருவரும் இதனை பின்பற்ற வேண்டும்.
ஆனால் தற்போது மதத்துக்கும் கொடுக்கும் முன்னுரிமை மனிதத்துக்கு கொடுக்கப்படுவதில்லை.
அந்தவகையயில் தமிழர்கள் தேசியத்தைக் கடந்து சமயத்துக்குள் பிளவுபடுவது பொது எதிரிக்கு வாய்ப்பை ஏற்படுத்தி விடும். இதனை சமயத்தலைவர்கள் நன்கு உணர்ந்து கொள்ள வேண்டும்.
ஆகவே திருக்கேதிஸ்வரச் சம்பவம் ஏற்புடையதன்று. வன்முறையால் ஒருபோதும் நீதியை நிலை நாட்ட முடியாது.
முரண்பாடுகள் ஏற்படுவது இயல்பானதே. அதை சமப்படுத்துவதற்கு ஆரோக்கியமான கலந்துரையாடலில் ஈடுபடுவதே சிறந்தது.
ஆகவே எதிர்காலத்தில் வன்முறையற்ற புரிந்துணர்வை ஏற்படுத்த முரண்பட்ட தரப்புக்கள் முன்வரவேண்டும்” என குறித்த அறிக்கையின் ஊடாக வி.எஸ். சிவகரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
