மருத்துவ சிகிச்சைக்காக ஆறு வார காலத்திற்கு பிணையில் செல்ல இன்று (செவ்வாய்க்கிழமை) அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எனினும், அவர் நாட்டைவிட்டு வெளியேற முடியாது என எச்சரிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அவர் பிணையில் விடுதலையாகும் நாள் முதல் ஆறு வாரங்களுக்கு அவருக்கான தண்டனை இடைநிறுத்தப்படும் என தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார்.
அத்துடன், அவருக்கான பிணைக்காலம் நிறைவடைந்தவுடன் அவர் தானாகவே முன்வந்து சரணடைவார் என எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வருவாய் மூலங்களை வெளியிட தவறிய குற்றச்சாட்டில் முன்னாள் பிரதமருக்கு கடந்த ஆண்டு ஏழு ஆண்டுகால சிறைத் தண்டனை விதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.