இப்பேச்சுவார்த்தை ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இலங்கை முதலீட்டாளர்களுக்கிடையில் கொழும்பில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்றது.
அமைச்சர் மலிக் சமரவிக்ரம தலைமையில் நடைபெற்ற இப்பேச்சுவார்த்தையில், ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கைக்கான தூதுவர் டோங் லாய் மார்க் கலந்துகொண்டிருந்தார்.
மேலும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் பொருளாதார நிபுணர்களளும் வர்த்தகப் பிரதிநிதிகளும் இதில் கலந்துகொண்டிருந்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது, இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்வதற்கு ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் முதலீட்டாளர்களை ஊக்குவிக்கும் விடயங்கள் ஆராயப்பட்டுள்ளன.
இப்பேச்சுவார்த்தை வினைத்திறனாக அமைந்திருந்ததாக ஐரோப்பிய ஒன்றியத் தூதரகம் தமது டுவிட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.