கொழும்பில் இன்று(வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் செஹான் சேமசிங்க இவ்வாறு வலியுறுத்தியுள்ளார்.
இந்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் பெருநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சு மற்றும் உள்துறை, உள்நாட்டு விவகார, மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீடுகள் நாடாளுமன்றத்தில் குழுநிலை வாக்கெடுப்பில் தோற்கடிக்கப்பட்டன.
இதையடுத்து நடத்தப்பட்ட வாக்கெடுப்பில், வஜித அபேவர்த்தனவின் கீழ் உள்ள உள்துறை, உள்நாட்டு விவகார, மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சுக்களுக்கான வரவுசெலவுத் நிதி ஒதுக்கீடுகள் 15 வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டன. ஆதரவாக, 23 வாக்குகளும் எதிராக 38 வாக்குகளும் அளிக்கப்பட்டன.
அதேவேளை, சம்பிக்க ரணவக்கவின் கீழ் உள்ள பெருநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடுகள் 14 மேலதிக வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டன. ஆதரவாக 24 வாக்குகளும், எதிராக 38 வாக்குகளும் அளிக்கப்பட்டன.
இந்தநிலையிலேயே இதற்கு பொறுப்பேற்று அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க, அமைச்சர் வஜிர அபேவர்தன ஆகியோர் சுயமாகவே தமது அமைச்சு பதவிகளை துறக்க வேண்டும் என மஹிந்த அணி வலியுறுத்தியுள்ளது.