கனடாவின் வின்ட்சர் பகுதிகளில் கடும் பனிப்பொழிவு நிலவக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
கனேடிய சுற்றுச்சூழல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாலை அல்லது இரவு வேளையில் உறைபனி மழையுடன் ஆலங்கட்டி மழை பெய்யக்கூடும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, சில பகுதிகளில் மின்தடை ஏற்படக்கூடும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.