மட்டக்களப்பு மாவட்ட 11
உள்ளூராட்சி மன்றங்கள் ஒருங்கிணைத்து ஆசிய மன்றத்தின்
அனுசரணையுடன் மாவட்டத்தில்
உள்ள 11 உள்ளூராட்சி மன்றங்களின் 84 நூலகங்களுக்கு
புத்தகங்கள் பகிர்ந்தளிக்கும்
நிகழ்வு இன்று மட்டக்களப்பில் நடைபெற்றது
மட்டக்களப்பு மாவட்டத்தில் பின்தங்கியுள்ள கல்வி தரத்தையும் ,வாசிப்பு
பழக்கத்தையும் ஊக்குவிப்பதன் மூலம் சிறந்த
நல்ல பிரஜைகளை உருவாக்க முடியும் என்ற
நோக்குடன் 8.8 மில்லியன்
ரூபா பெறுமதியான 4860 ஆயிரம்
புத்தகங்கள் நூலகங்களுக்கு புத்தகங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது
மட்டக்களப்பு உள்ளூராட்சி உதவி ஆணையாளர் எஸ் .பிரகாஷ் தலைமையில்
மட்டக்களப்பு பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளர் அலுவலகத்தில் நடைபெற்ற
புத்தகங்கள் பகிர்ந்தளிக்கும் நிகழ்வில் மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் கே .சித்திரவேல் ,ஆசிய
மன்றத்தின் புத்தக
நிகழ்ச்சி திட்ட பணிப்பாளர் எண்டன் நல்லதம்பி , டெலிகொம் நிறுவனத்தின்
மட்டக்களப்பு பிராந்திய முகாமையாளர் யோகராஜா ,மற்றும் நகரசபை தவிசாளர்கள் ,
பிரேதச சபை செயலாளர்கள் ,, நூலகர்கள் கலந்துகொண்டனர்