அமராவதியில் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போது சந்திரபாபு நாயுடு இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது,
“மத்திய அரசு ஆந்திர மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிறை நிறைவேற்றாமல் ஏமாற்றி விட்டதுடன் மாநில அரசையே குற்றம் சுமத்துகிறது.
மேலும் மக்களுக்கு எதிரான செயற்பாடுகளில் மத்திய அரசு ஈடுபடும்போது அதற்கெதிராக குரல் கொடுத்தால் சி.பி.ஐ மற்றும் வருமான வரித்துறை ஆகியவற்றின் ஊடாக பொய்யான சோதனையை மேற்கொண்டு அரசியல் பழிவாங்கலில் ஈடுபடுகின்றது.
இதேவேளை தெலங்கானா பிரிக்கப்பட்டபோது, உடுத்திய ஆடையுடன் ஆந்திர மக்கள் அங்கிருந்து வெளியேறினர்.
அதனைத் தொடர்ந்து இயற்கையின் சீற்றத்துக்கும் ஆளாகினர். ஆனாலும் இவை அனைத்தையும் துணிவுடன் எதிர்கொண்டு செயற்பட்டனர்.
அதன் பயனாகவே தொழில் தொடங்க ஏற்ற மாநிலங்கள் பட்டியலில் ஆந்திரா தற்போது முதலிடத்தில் உள்ளது.
இதனால் பல்வேறு வெளிநாட்டு நிறுவனங்கள் தொழில் தொடங்க ஆந்திராவை தேர்வு செய்தன. இதன்மூலம் வேலை வாய்ப்பும் தற்போது அதிகரித்துள்ளது” என சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.