கனடாவின் Nova Scotia மாகாணத்தின் Eastern Passage பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
விபத்துக்குள்ளான கார் தீப்பற்றி எரிந்ததாகவும், இதன்போது காரிலிருந்த மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்தில் உயிரிந்தவர்கள் இதுவரையில் அடையாளம் காணப்படவில்லை எனவும் பொலிஸார் கூறியுள்ளனர்.
விபத்து குறித்து வழக்கு பதிவு செய்துள்ள பொலிஸார், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.