அந்தவகையில் ஜூலை முதலாம் திகதி தொடங்கும் இந்த யாத்திரை 46 நாட்களுக்கு நடைபெற்று ஓகஸ்ட் 15ஆம் திகதியுடன் நிறைவடையும் என ஜம்மு ராஜ்பவன் அலுவலகம் தெரிவித்துள்ளது.
ஜம்மு ஆளுநர் சத்ய பால் மாலிக் தலைமையில் 36ஆவது கூட்டம் இன்று (வியாழக்கிழமை) நடைபெற்றது. இக்கூட்டத்தின் முடிவில், இந்த ஆண்டுக்கான அமர்நாத் யாத்திரை குறித்து கலந்துரையாடப்பட்டது.
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் அமர்நாத் குகைக் கோயிலில் ஆண்டுதோறும் தோன்றும் பனி இலிங்கத்தைத் தரிசிக்க ஜம்மு வழியாக இலட்சக்கணக்கான யாத்திரிகர்கள் பயணம் செய்வார்கள்.
கடந்த 2017ஆம் ஆண்டின் ஜூலை மாதம் யாத்திரிகர்கள் சென்ற பேருந்தை குறிவைத்து பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 7 பேர் உயிரிழந்தனர். எனவே அமர்நாத் யாத்திரையின் போதான பாதுகாப்பு இம்முறையும் அதிகரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.