ஐ.நா. சபையில் பிரான்ஸ் இதற்கு அழுத்தம் கொடுக்கும் என்று இந்தியாவுக்கான பிரான்ஸ் தூதர் அலெக்சாண்டர் சியெக்லர் (Alexandre Ziegler) தெரிவித்துள்ளார்.
மேலும், கடந்த இரண்டு ஆண்டுகளாகவே இதற்கு அழுத்தம் கொடுக்கப்பட்டு வருவதாகவும், ஒரு தீவிரவாத இயக்கத்தின் தலைவர் இன்னும் சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்கப்படாமல் இருப்பது அர்த்தமற்றது என்றும் பிரான்ஸ் தூதர் கூறினார்.
ஜெய்ஷ் இ முகமது இயக்கம் ஐ.நா சபையால் தீவிரவாத இயக்கமாக அறிவிக்கப்பட்டுள்ள போதிலும் அந்தஇயக்கத்தின் தலைவர் மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்க எடுக்கப்பட்ட முயற்சிகள் வெற்றி பெறவில்லை.
அந்தவகையில், ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தர உறுப்புநாடுகளில் ஒன்றான சீனா, அந்த முயற்சிகளை தடைசெய்துவிட்டது.
புல்வாமா தாக்குதலுக்கு பிறகு மசூத் அசாரை ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் மூலம் சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்கச் செய்யும் முயற்சிகள் மீண்டும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
பாதுகாப்பு கவுன்சிலின் தலைமைபொறுப்பு மாதம் தோறும் ஒவ்வொரு நாட்டிற்கும் சுழற்சி அடிப்படையில் மாற்றி அமைக்கப்படும். அந்தவகையில், இந்த மாதத்திற்கான ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலின் தலைவர் பதவி பிரான்ஸ் நாட்டிற்கு கிடைக்கும். எனவே அவ்வாறு கிடைத்தவுடன் இந்நடவடிக்கை எடுக்கப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.