இந்த அறிக்கையின்படி, குறித்த பெண் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
நேற்று முன்தினம் (வியாழக்கிழமை) காலை 7.15 மணியளவில் 100ஆவது வீதி மற்றும் 105ஏ அவனியூ பகுதிக்கு பொலிஸார் அழைக்கப்பட்டனர்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், கொடூரமாக காயங்களுடன் 48 வயதான பெண்ணொருவரை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். எனினும் அவர் துரதிஷ்டவசமாக உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த பெண்ணின் பெயர் உள்ளிட்ட விபரங்களை பொலிஸார் வெளியிடாத போதும், குறித்த பெண் ரோஸ் கட்னீஃப் என கனடாவின் ஊடகமொன்று அடையாளம் கண்டு செய்தி வெளியிட்டுள்ளது.
இந்நிலையில் இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார், தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.