குறித்த வழக்கு விசாரணை இன்று (வெள்ளிக்கிழமை) நீதிபதியான ரஞ்சன் கோகாய் தலைமையிலான 5 நீதிபதிகளை கொண்ட அரசியல் சாசனம் முன்பாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இந்த வழக்கு விசாரணையின் போது ஓய்வு பெற்ற நீதிபதியான கலிபுல்லா தலைமையிலான மத்தியஸ்தர் குழுவொன்றினையும் உயர்நீதிமன்றம் நியமித்துள்ளது.
இக்குழு 1-8 வாரத்திற்குள் இவ்விடயம் குறித்து ஆராய்ந்து தீர்மானிக்க வேண்டுமென உத்தரவிட்டுள்ளதுடன், சமரசப் பேச்சுவார்த்தை பற்றிய விபரங்களை ஊடகங்களிடம் வெளியிடக்கூடாதெனவும் உத்தரவு பிறப்பித்துள்ளது.
அயோத்தியிலுள்ள சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் யாருக்குச் சொந்தமானது என்பது பற்றி வழக்கு தொடரப்பட்ட நிலையில் குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.