இந்த நிகழ்ச்சிகள் தொடர்ந்து ஒரு வார காலம் இடம்பெறவுள்ளன. இதனுடன் இணைந்ததாக நாடெங்கிலுமுள்ள 226 விகாரைகளில் அறநெறி பாடசாலைகளை அமைக்கும் முயற்சிகள் வரும் ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமாகும் என அமைச்சர் சஜித் பிரேமதாஸ குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் எண்ணக்கருவுக்கு அமைய திரிபீடகம் தேசிய மரபுரிமையாக பிரகடனப்படுத்தப்பட்டது.
அதனை உலக மரபுரிமையாக பிரகடனப்படுத்த கோரும் தீர்மானம் எதிர்வரும் 23ஆம் திகதி கண்டி தலதா மாளிகையில் யுனெஸ்கோ அமைப்பிடம் ஒப்படைக்கப்படவுள்ளது. இதற்கு பௌத்த நாடுகள் ஒத்துழைப்பு வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.