நேற்று (சனிக்கிழமை) இரவு முதல் இன்று இரவு வரையிலான காலப்பகுதிக்குள் பலத்த உறைபனி மழை அல்லது பனிப்பொழிவு காணப்படும் என அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அந்த வகையில் நேற்று நள்ளிரவிலிருந்து நாளை பிற்பகல் வரையிலான காலப்பகுதியில், 15-லிருந்து 25 மில்லிமீட்டர் வரையிலான மழைப்பொழிவுக்கான சாத்தியம் காணப்படுவதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் ஒன்ராறியோவின் மத்திய பகுதியின் சில இடங்களில் நாளை 5லிருந்து 10 சென்ரிமீட்டர் வரையிலான பனி பொழியும் என்றும் அத்திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
அத்தோடு இன்று காற்று மணிக்கு 70-லிருந்து 80 கிலோமீடடர் வேகத்தில் வீசக்கூடும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.