வரவு செலவுத்திட்ட இரண்டாம் கட்ட விவாதத்தில் இணைந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
“கடந்த அரசாங்கத்தில் மத்திய வங்கியில் ஊழல்மோசடி இடம்பெற்று வந்துள்ளது என்பதை ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு அறிக்கைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் 2008 ஆம் ஆண்டு முதல் இந்த மோசடி இடம்பெற்று வந்துள்ளதை குறித்த அறிக்கைகள் கூறுகின்றன. எனினும் கண்டுபிடிக்க முடியாதவாறே அந்த மோசடிகள் இடம்பெற்றுள்ளன.
குறித்த ஊழல்வாதிகள் விசாரணை நடத்த முடியாதவாறு சட்டத்திலுள்ள ஓட்டைகளில் நுழைந்து மறைந்து விடுகின்றனர்.
இதனால் அவர்களுக்கு தண்டனைகளைப் பெற்றுக் கொடுப்பதில் பல முட்டுக்கட்டைகள் காணப்படுகின்றன. இந்நிலையில் 2016ஆம் ஆண்டிற்குப் பின்னர் எந்தவித மோசடியும் இடம்பெறவில்லை” என அஜித் மான்னப்பெரும மேலும் குறிப்பிட்டுள்ளார்.