வின்னிபெக்கில் ஏற்கனவே கடும் பனிப்பொழிவு ஏற்பட்டு ஆங்காங்கே மின் விநியோகத் தடைகளும், பல இடங்களில் வாகன விபத்துக்களும் ஏற்பட்டுள்ளன.
இந்நிலையில், நாளை(திங்கட்கிழமை) பலத்த பனிப்பொழிவு காணப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கனேடிய சுற்றுச்சூழல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள சிறப்பு அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், கட்டடங்களின் கூரைகள், ஜன்னல்கள் என்பனவற்றுக்கு பாதிப்பு ஏற்படும் எனவும், மரங்கள், கம்பங்கள் முறிந்து வீழ்வதால் மின்விநியோகம் தடைப்படலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
