“பெறுவதற்காக மட்டும் கைகளை விரித்து வைத்திராதே| கொடுக்கும் நேரத்திலோ உன் கைகளை மூடிக் கொள்ளாதே.
உன் செல்வங்களில் நம்பிக்கை வைக்காதே| ‘எனக்கு அவை போதும்’ எனச் சொல்லாதே.
உனது நாட்டங்களுக்கும், வலிமைக்கும் அடிமையாகாதே| உனது உள்ளங்களின் விருப்பங்களைப் பின்பற்றாதே.
உனக்கு எதிராகச் செயற்படக் கூடியவன் யார் எனச் சொல்லாதே| ஆண்டவர் உன்னைத் தண்டியாமல் விடமாட்டார்”
பெறும்போது ஆவலுடன் கைகளை விரித்து நிற்கும் நாம் அடுத்தவர்க்கு கொடுக்கும்போது அதே கைகளை சுருக்கி மூடிக் கொள்கிறோம். அத்தனை கஞ்சத்தனம் நமக்கு. நிறைய இருந்தால் அள்ளிக் கொடுத்தும், குறைய இருந்தால் கிள்ளிக் கொடுத்தும், எதுவும் இல்லையென்றால் இரண்ட வார்த்தைகளையாவது ஆறுதலாகச் சொல்லி வை என்று கொடுக்கின்ற மனநிலை எப்படியாக இருக்க வேண்டும் என்று சொல்லி வைத்திருக்கிறார்கள். நாம் தேடிய தேட்டங்களில் முழுமையாக நம்பிக்கை வைத்து வாழுகின்ற நாம் நமது செயல்கள், சிந்தனைகள், சொற்கள் மூலம் நம்மை வந்தடையக்; கூடிய முதிசத்தை மறந்து விடுகின்N;றாம். வேளைகளில் நம்மில் நாமே அதிகம் நம்பிக்கை வைத்தவர்களாய் வாழ முற்படுகின்றோம். ஆனால் நினையாத நேரத்தில் வருவது இறைவனின் நீதி. அப்போது நாம் தேடிய எதுவும் நம்மோடு வருவதில்லை. வரும்போது நமக்கென ஏதையோ கொண்டு வருவது போன்று மூடிக் கொண்டு வந்த கரங்களை போகும்போது கொண்டு செல்ல எங்களிடம் ஒன்றுமேயில்லை என்பது போல் கைகளை விரித்து முடித்து வைக்கின்றோம் நம் வாழ்வை.
பதினோராம்; நிலை
சிலுவையில் இணைப்பு
திவ்விய இயேசுவே உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றியறிந்த தோத்திரம் சொல்லுகின்றோம்.
அதேதென்றால் உமது திருச்சிலுவையைக் கொண்டு உலகத்தை மீட்டு இரட்சித்தீர்
சிலுவையினின்றும் மீளாதபடி இயேசு ஆணி கொண்டு பிணைக்கப்படுகிறார் .. ..அவரல்ல ! .. .. கிறீஸ்தவமே அங்கு சிலுவையோடு இணைக்கபடுவது .. ..!! .. இனி சிலுவை வேறு .. .. கிறீஸ்தவம் வேறு அல்ல!!!
மனிதனின் பாதையும், இறைவனின் பாதையும் குறுக்கறுத்ததின் அடையாளமாக இயேசு சிலுவையடையாளத்திலே வரலாற்றுச் சின்னமாகப் பிணைக்கப்படுகிறார்.
மனிதம் மண்ணில் நிலைபெறத் தன்னில் ஆணியை ஏற்றுகின்றார் .. .. இயேசு, புனிதம் மனிதனில் இடம்பெறவென்று சிலுவையில் ஏறுகின்றார்.
சிலுவையின்றேல் மீட்சியில்லை .. .. எமக்குச் சிலுவையின்றேல் ஒரு வாழ்க்கையில்லை என்கின்ற நிலையை உணர்த்தும் அடையாளமாகத் தன்னைச் சிலுவையில் பிணைக்க வைக்கின்றார் இயேசு.. ..!
எமக்காகத் தம் தோளிலும், பின்னர் கை, கால்களிலும் சிலுவையை ஏற்ற இயேசுவிடம் சொல்வோம்:-
“ இயேசுவே , பாவத்தை மனதிலே கருத்தரிக்கும் நாங்கள் .. .. சாவின் கருவறைதான் ! ஆனால் எம் பாவத்தை நீர் சிலுவைக்கு மாற்றியதாலே எம் உள்ளத்தைப் புனிதம் ஆக்கினீர் .. .. நீரும் நானும் சந்திக்குமிடம்தான் சிலுவை என்று அறிவேன் .. .. சிலுவை வாழ்வில் அகன்றுவிட்டால் உம்மை நினைப்பது அருகிவிடும்.. .. ! கிறீஸ்தவம் காட்டும் சிலுவையில் என்னைப் பிணைத்திட வரம் தாரும் இயேசுவே.”
எங்கள் பேரிற் தயவாய் இரும் சுவாமி.. .. எங்கள் பேரிற் தயவாய் இரும்!
மரித்த விசுவாசிகளின் ஆன்மாக்கள் சர்வேசுரனின் இரக்கத்தால் நித்திய சமாதானத்தில் இளைப்பாறக் கடவன.