இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக எதிர்வு கூறப்பட்டுள்ள நிலையிலேயே வளிமண்டளவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கையை விடுத்துள்ளது.
மேல், சப்ரகமுவ, வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களிலும், காலி, மாத்தறை, பதுளை ஆகிய மாவட்டங்களிலும் இடியுடன்கூடிய பலத்த மழை பெய்யக்கூடும் என எதிர்கூறப்பட்டுள்ளது.
குறித்த பகுதிகளில், 100 மில்லிமீற்றருக்கு அதிக மழை பெய்யும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.