கண்டியில் இன்று (சனிக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், “கடந்த அரசியல் குழப்ப நிலையின் போது மஹிந்தவை பிரதமராக்கி, மூன்றில் இரண்டு பெரும்பான்மை இல்லாமல் ஆட்சி அமைக்க முற்பட்டமை முடத்தனமானதாகும்.
அந்த தீர்மானத்தில் சந்தேகம் காணப்பட்டது. என்றாலும் ஆட்சி கலைக்கப்பட்டது. அது தவறு என உயர் நீதிமன்றம் அறிவித்தது. இதனால் எமது கட்சியில் சிறிய பின்னடைவு ஏற்பட்டமை உண்மையாகும்.
இந்த வரவு செலவுத் திட்டத்தில் எதிராக வாக்களிக்கவே நாம் தீர்மானித்திருந்தோம். இறுதியில் வரவு செலவு திட்டத்திற்கு வாக்களிக்காது விலகியிருக்கத் தீர்மானித்தோம். எனினும் அதிலும் குறைபாடுகள் உள்ளன. இறுதி வாக்கெடுப்பில் ரணில் அரசாங்கத்தின் வரவு செலவு திட்டத்திற்கு எதிராகவே நாம் வாக்களிப்போம்” என்று தெரிவித்தார்.