மேலும், இந்திய விமானப்படை சிறப்பான திறன் கொண்டது என்றும் கூறினார். கோவை சூலூரில் செய்தியாளர்களுக்கு இன்று (திங்கட்கிழமை) கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் கூறினார்.
இதுகுறித்து தொடர்ந்தும் தெரிவித்த அவர், “மிக் 21 ரக விமானங்கள் மேம்படுத்தப்பட்டு தாக்குதல் திறன் அதிகரிக்கப்பட்டுள்ளதாக கூறினார்.
மேலும், உடல் தகுதியை பொறுத்து அபிநந்தன் விமானங்களை இயக்க அனுமதிப்பது பற்றி முடிவெடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
இந்திய விமானப்படை தாக்குதலில் எத்தனை பேர் உயிரிழந்துள்ளனர் என்பதை தாங்கள் கணக்கு வைக்கவில்லை, அதனை அரசுதான் விளக்க வேண்டும் என்றும், பாகிஸ்தானில் தாக்க வேண்டிய இலக்கை இந்திய போர் விமானங்கள் தாக்கிவிட்டன” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
