LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Friday, March 8, 2019

அனுமதியை மீறி மண் ஏற்றிய எட்டு பேர் கைது


வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இரண்டு வௌ;வேறு இடங்களில் அனுமதிப்பத்திர விதிகளை மீறி சட்டவிரோதமாக மணல் ஏற்றி வந்த எட்டு உழவு இயந்திரமும், எட்டு சாரதியையும் வியாழக்கிழமை மாலை கைது செய்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தெரிவித்தார்.

வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தலைமையிலான குழுவினரினால் புணாணை மற்றும் பொத்தானை பகுதியில் அனுமதிப்பத்திர விதிகளை மீறி சட்டவிரோதமான முறையில் மண் ஏற்றி வந்த நான்கு உழவு இயந்திரமும், நான்கு சந்தேக நபரையும் காவத்தமுனை பகுதியில் வைத்து கைது செய்துள்ளனர்.

அத்தோடு கிரான் புலிபாய்ந்தகல் பகுதியில் அனுமதிப்பத்திர விதிகளை மீறி சட்டவிரோதமான முறையில் மண் ஏற்றி வந்த நிலையில் நான்கு உழவு இயந்திரமும், நான்கு சந்தேக நபரையும் கிரான் பகுதியில் வைத்து கைது செய்துள்ளனர்.


இச்சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டவர்களை வாழைச்சேனை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன மேலும் தெரிவித்தார்.


வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் சட்டவிரோத மண் அகழ்வு நடவடிக்கை இடம்பெற்று வரும் நிலையில் இதனை தடுக்கும் முகமாக பொத்தானை, பொண்டுகள்சேனை, வாகனேரி, ஆத்துச்சேனை, புலியாந்தகல் போன்ற பகுதிகளில் சட்டவிரோத மண் அகழ்வில் ஈடுபட்டு வருபவர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.









 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7